அறக்கட்டளை தொடங்கினார் கமல்ஹாசன்
ADDED : 1004 days ago
நடிகர் கமல்ஹாசன் முதன் முதலாக ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றினார். அதன்பிறகு மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். இந்த நிலையில் தற்போது 'கமல் பண்பாட்டு மையம்' என்ற பெயரில் புதிய அறக்கட்டளை ஒன்றை தொடங்கி உள்ளார். இதன் தலைவராக கமல் இருப்பார். இது அரசியல் சார்பற்ற லாப நோக்கமற்ற அமைப்பு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கலை இலக்கிய பண்பாட்டு பணிகளை செய்யவும், அரசியல் சார்பற்ற பொது சேவைகளுக்காகவும் இந்த அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளதாக நேற்று நடந்த கட்சியின் நிர்வாக குழுவில் அறிவிக்கப்பட்டது.