உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அனில் கபூருடன் முத்தக் காட்சி : விமர்சிக்கப்படும் 'பொன்னியின் செல்வன்' நடிகை

அனில் கபூருடன் முத்தக் காட்சி : விமர்சிக்கப்படும் 'பொன்னியின் செல்வன்' நடிகை

ஓடிடி தளங்களில் வெளியாகும் வெப் தொடர்களுக்கு சென்சார் இல்லை. அதனால், அவற்றில் அதிகமான வன்முறைக் காட்சிகள், படுக்கையறைக் காட்சிகள், முத்தக் காட்சிகள், கெட்ட வார்த்தைகள், ஆபாச வசனங்கள் என பலவும் இடம் பெற்று வருகின்றன.

சமீபத்தில் வெளியான ஹிந்தி வெப் தொடர்களான 'பார்சி' தொடரில் நிறைய கெட்ட வார்த்தைகள் இடம் பெற்றுள்ளது. மற்றொரு தொடரான 'த நைட் மேனேஜர்' தொடரில் முத்தக் காட்சிகள் நிறைய இடம் பெற்றுள்ளது குறித்து சமூக வலைத்தளங்களில் பலவிதமான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

குறிப்பாக 'த நைட் மேனேஜர்' தொடரில் அதன் கதாநாயகனாக நடிக்கும் 66 வயதான அனில் கபூருக்கு அவருடைய ஜோடியாக நடிக்கும் 30 வயதான சோபிதா துலிபாலா நிறைய முத்தங்கள் கொடுப்பது சர்ச்சையை ஆரம்பித்துள்ளது. படத்தில் அவர் அணிந்து வரும் ஆடைகள் குறித்தும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. ஒரு வயதான நடிகர், இளம் நடிகை சம்பந்தப்பட்ட காட்சிகளில் இவ்வளவு முத்தங்களையா வைப்பது என கண்டனங்களும் தெரிவித்து வருகிறார்கள்.

மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த 'பொன்னியின் செல்வன்' படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடித்தவர்தான் இந்த சோபிதா துலிபாலா. இரண்டாம் பாகத்தில் இவருடைய காட்சிகள் நிறைய இடம் பெற உள்ளது. வெப் தொடரில் முத்தக் காட்சிகளில் அவர் நடித்திருப்பதால் 'பொன்னியின் செல்வன் 2' படத்திற்கு அது எதிர்மறையான விஷயமாக அமையவும் வாய்ப்புள்ளது.

இப்படிப்பட்ட முத்தக் காட்சிகள், ஆபாச வசனங்களால்தான் பல தொடர்கள் அதிகமாகப் பார்க்கப்பட்டு வருகிறது என்பதும் உண்மை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !