குட்டி ஸ்கர்ட்டில் க்யூட் போஸ் கொடுக்கும் லாஸ்லியா
ADDED : 948 days ago
இலங்கையச் சேர்ந்த அழகியான லாஸ்லியா தமிழ்நாட்டில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தீவிரமாக சினிமாவில் நடிக்கும் முயற்சிகளில் இறங்கினார். அதற்காக உடல் எடையை குறைத்து கவர்ச்சியான போட்டோஷூட்களையும் வெளியிட்டு வந்தார். அதன் பலனாக பிரெண்ட்ஷிப், கூகுள் குட்டப்பா என இரண்டு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அந்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. தற்போது ஓரிரு படங்களில் நடிக்கிறார். இன்ஸ்டாவில் ஆக்டிவ்வாக இருக்கும் லாஸ்லியா மீண்டும் போட்டோஷூட்டில் குதித்துள்ளார். அதில் சில புகைப்படங்களில் குட்டையான ஸ்கர்ட் அணிந்து தாறுமாறாக கிளாமர் காட்டி வருகிறார். இந்த புகைப்படங்கள் வைரலாகின.