மேலும் செய்திகள்
மதராஸி, லோகா படங்களின் பாக்ஸ் ஆபீஸ் தகவல் வெளியானது!
926 days ago
ஓடிடியிலும் விமர்சனங்களை சந்தித்த கூலி!
926 days ago
பிரபல பாலிவுட் நடிகையான தீபிகா படுகோனே தமிழில் ரஜினியுடன் கோச்சடையான் படத்தில் நடித்திருந்தார். திருமணத்திற்கு பிறகும் பிசியாக நடித்து வரும் அவர், ஷாருக்கானுடன் பதான் படத்தில் நடித்தார். இந்தப்படம் பாக்ஸ் ஆபிஸில் 1000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை புரிந்தது. இதன் காரணமாக தற்போது தீபிகா படுகோனே பாலிவுட்டில் மேலும் பல புதிய படங்களில் கமிட்டாகி வருகிறார்.
இந்த நிலையில் மார்ச் 12ம் தேதி அமெரிக்காவில் நடைபெறும் ஆஸ்கர் விருது விழாவை தொகுத்து வழங்கவிருக்கும் பிரபலங்களின் பட்டியலில் தீபிகா படுகோனேவின் பெயரும் இடம் பெற்றுள்ளது. விருது அறிவித்து, வழங்க உள்ள இந்த தொகுப்பாளர் பட்டியலில் மொத்தம் 16 பேர் இடம் பெறுகிறார்கள். அவர்களில் ஹாலிவுட் நடிகர்கள் டுவைன் ஜான்சன் உள்ளிட்டோரும் அடக்கம். இதையடுத்து தீபிகாவிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. தீபிகாவின் கணவர் ரன்வீர் சிங்கும் வாழ்த்து தெரிவித்து இமோஜி பதிவிட்டுள்ளார்.
இந்த ஆண்டு ஆஸ்கர் விழாவில் ராஜமவுலி இயக்கி உள்ள ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு என்ற பாடல் சிறந்த பாடலுக்கான இறுதிப்பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது. அந்த பாடலுக்கு கண்டிப்பாக விருது கிடைக்கும் என்று எதிர்பார்ப்போடு அப்பட குழு தற்போது அமெரிக்காவில் முகாமிட்டுள்ளது.
926 days ago
926 days ago