உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சந்திரமுகியாக களத்தில் இறங்கிய கங்கனா

சந்திரமுகியாக களத்தில் இறங்கிய கங்கனா

தமிழில் ஜெயம் ரவி நடித்த தாம்தூம் என்ற படத்தில் அறிமுகமானவர் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத். அதன்பிறகு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவான தலைவி படத்தில் நடித்திருந்தார். ஹிந்தியில் முன்னணி நடிகையாக திகழும் இவர் இப்போது பி .வாசு இயக்கி வரும் சந்திரமுகி-2 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல் பக்கத்தில் ஜோதிகா நடித்த சந்திரமுகி வேடத்தை தான் இப்போது கங்கனா தொடருகிறார்.

இந்த நிலையில் அவர், சந்திரமுகி கெட்டப்பிற்காக தான் மேக்கப் போட்டுக் கொண்டிருக்கும் புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். என்றாலும் அந்த புகைப்படங்களில் மொபைலை வைத்து தனது முகத்தை அவர் மறைத்திருக்கிறார். அவரது தலை அலங்காரம் மட்டுமே அந்த புகைப்படங்களில் தெரிகிறது. மேலும் சந்திரமுகி 2 தொடர்பான செட் காட்சி உடன் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. கங்கனாவின் இந்த சந்திரமுகி கெட்டப் புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !