எதிரிகள மிதிச்சு ஏறி மேல வந்தவன்... - வெளியானது சிம்புவின் ‛பத்து தல' டீஸர்
வெந்து தணிந்தது காடு படத்திற்கு பின் சிம்பு நடிப்பில் வெளியாக உள்ள படம் ‛பத்து தல'. கன்னடத்தில் வெற்றி பெற்ற முப்டி படத்தின் ரீமேக்காக இந்தப்படம் உருவாகி உள்ளது. சிம்பு உடன் கவுதம் கார்த்திக், கவுதம் மேனன், பிரியா பவானி சங்கர் ஆகியோரும் நடித்துள்ளனர். ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடக்கின்றன. மார்ச் 30ல் படம் வெளியாக உள்ள நிலையில் படத்தின் டீஸரை வெளியிட்டுள்ளனர். 1:37 நிமிடம் ஓடக்கூடிய இந்த டீசர் சிம்புவின் அதிரடி ஆக் ஷன் படமாக உருவாகி உள்ளது.
‛‛மண்ண ஆள்றவனுக்கு தான் எல்ல... மண்ண அள்ற எனக்கு அது இல்ல...., நான் படியேறி மேல வந்தவன் இல்ல... எதிரிகள மிதிச்சு ஏறி மேல வந்தவன்..., என்னால எத்தன பேரு செத்தானும் தெரியாது எத்தன பேரு வாழ்ந்தானும் தெரியாது...'' என்பது மாதிரியான பவர்புல் பஞ்ச் வசனங்களும் டீஸரில் இடம் பெற்றுள்ளனர். அதற்கு ஏற்றபடி ரஹ்மானின் பின்னணி இசையும் அசத்தலாக உள்ளது.
ரசிகர்களை கவர்ந்துள்ள இந்த டீஸர் ஒன்றரை மணிநேரத்தில் 5 லட்சம் பார்வைகளை கடந்து, டிரெண்ட் ஆனது.