ருத்ரன் படப்பிடிப்பு நிறைவு
ADDED : 947 days ago
நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ருத்ரன். இப்படம் ஏப்ரல் 14ம் தேதி வெளியாக இருக்கிறது. தற்போது படத்தின் ரிலீஸிற்கு வியாபாரம் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது படக்குழு இப்படத்தின் படப்பிடிப்பை முழுவதுமாக முடித்துவிட்டதாக புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்துள்ளனர். இப்படத்தின் தயாரிப்பாளர் கதிரேசனே ருத்ரன் படத்தையும் இயக்கி வருகிறார். இது இவரின் முதல் இயக்கமாகும். முக்கிய கதாபாத்திரங்களில் பிரியா பவானி சங்கர் மற்றும் சரத்குமார் நடித்துள்ளனர். இப்படம் தமிழ் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாகவுள்ளது.