இறுதிகட்டத்தில் கக்கன் வாழ்க்கை படம்
ADDED : 942 days ago
தமிழ்நாட்டில் நேர்மையின் அடையாளமாக குறிப்பிடப்படுகிறவர் கக்கன். தமிழக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான கக்கன், காமராஜர் அமைச்சரவையில் பல்வேறு துறை அமைச்சராக இருந்தவர். நேர்மையான கக்கனின் வாழ்க்கை சத்தமின்றி படமாகி வருகிறது. இந்த படத்தை சங்கர் மூவீஸ் இன்டர்நேஷனல் சார்பில் ஜோசப் பேபி என்பவர் தயாரித்து, திரைக்கதை, வசனம் எழுதி உள்ளார். பிரபு மாணிக்கம், ரகோத் விஜய் இயக்குகிறார்கள். வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். தேவா இசை அமைக்கிறார். தற்போது இந்த படம் இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளது. கக்கன் பிறந்த நாளான ஜூன் 8ம் தேதி படத்தை வெளியிடும் திட்டத்தோடு பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.