இந்த வாரத்தில் வெளிவர இருக்கும் சிம்புவின் அடுத்த பட அறிவிப்பு
ADDED : 983 days ago
நடிகர் சிம்பு நடிப்பில் கடைசியாக வெளிவந்த வெந்து தணிந்த காடு நல்ல விமர்சனங்கள் பெற்றாலும் வசூல் ரீதியாக எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. தற்போது சிம்புவின் நடிப்பில் உருவாகி ரிலீஸ்க்கு தயாராக உள்ள திரைப்படம் பத்து தல. இப்படம் வரும் மார்ச் 30 அன்று வெளியாகிறது. நடிகர் சிம்பு கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என செய்திகள் சமீபத்தில் சமூக வலைதளங்களில் பரவி வந்தது.
தற்போது இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் நடிகர்கள், நடிகைகள், டெக்னீசியன்கள் குறித்த அறிவிப்பு இந்த வாரம் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர் எனவும் கூறப்படுகிறது.