‛கப்ஜா'-வை தமிழகத்தில் வெளியிடும் லைகா
ADDED : 939 days ago
தமிழில் பொன்னியின் செல்வன் 2, அஜித் 62 உட்பட பல படங்களை தயாரித்து வரும் லைகா நிறுவனம், கன்னடத்தில் உபேந்திரா, கிச்சா சுதீப், ஸ்ரேயா சரண், முரளி சர்மா உள்பட பலரது நடிப்பில் உருவாகி இருக்கும் கப்ஜா படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற்றுள்ளது. இந்த படம் வருகிற மார்ச் 17ம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1945ம் ஆண்டு இந்திய சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்து கதையில் உருவாகி இருக்கும் கப்ஜா படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, மராத்தி, ஒரியா என 7 மொழிகளில் வெளியாகிறது. இப்படத்தை படத்தை ஆர். சந்துரு இயக்கியுள்ளார்.