மும்பை விமான நிலையத்தில் இரட்டை குழந்தைகளுடன் நயன்தாரா - விக்னேஷ் சிவன்
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதியர் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார்கள். அதையடுத்து தங்கள் குழந்தைகளுடன் தாங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டபோதும் அவர்களின் முகத்தை இதுவரை வெளி உலகிற்கு காண்பிக்காமல் இருந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நயன்தாரா- விக்னேஷ் சிவன் ஆகியோர் மும்பை விமான நிலையத்திற்குள் தங்களது இரட்டை குழந்தைகளுடன் செல்லும் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.