இணையத்தை கலக்கும் பாவ்னா - சம்யுக்தா நடன வீடியோ
ADDED : 944 days ago
விஜய் டிவி தொகுப்பாளினி பாவ்னா பாலகிருஷ்ணனும், பிக்பாஸ் பிரபலமான சம்யுக்தாவும் நெருங்கிய தோழிகள் என்பது அனைவரும் அறிந்ததே. இருவரும் ஒன்றாக சேர்ந்து நடனமாடி இன்ஸ்டாகிராமில் அடிக்கடி பல ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டுள்ளனர். சமீபத்தில் டிரெண்டிங்கில் இடம்பெற்றும் வரும் 'டம் டம்' பாடலுக்கு முன்னணி நடிகைகள் பலரும் நடனமாடி ரீல்ஸ் செய்து வருகின்றனர். அந்த லிஸ்டில் இணைந்துள்ள சம்யுக்தாவும் பாவனாவும் ஒரே மாதிரியாக உடை அணிந்து நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளனர். பார்ப்பதற்கு இரட்டை சகோதரிகள் இணைந்து நடனமாடுவது போல் அழகாக இருக்கும் அந்த வீடியோ மற்ற ரீல்ஸ்களை பின்னுக்கு தள்ளி ரசிகர்களின் பார்வையை பறித்து லைக்ஸ்களை குவித்து வருகிறது.