முதன் முறையாக தனி இசை நிகழ்ச்சி நடத்தும் ஜி.வி.பிரகாஷ்
ADDED : 955 days ago
இசை அமைப்பாளர்கள் மேடை இசை நிகழ்ச்சி நடத்துவது தற்போது அதிகரித்து வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா, அனிருத் என பலரும் உலகம் முழுக்க இசை நிகழ்ச்சி நடத்துகிறார். ஹாரிஸ் ஜெயராஜும், வித்யாசாகரும் இசை நிகழ்ச்சி நடத்த கிளம்பி விட்டார்கள். இந்த நிலையில் ஜி.வி.பிரகாசும் இந்த வரிசையில் இணைந்திருக்கிறார். முதன் முறையாக தனது தனி மேடை இசை நிகழ்ச்சியை கோவையில் வருகிற மே மாதம் 27ம் தேதி அரங்கேற்றுகிறார். தனியார் கல்வி நிறுவனம் ஒன்று இதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ஜி.வி.பிரகாஷ் உடன் பணியாற்றிய பாடகர், பாடகிகள் கலந்து கொண்டு பாடுகிறார்கள்.