நீண்ட இடைவெளிக்கு பின் படம் இயக்கும் பாரதிராஜா
ADDED : 946 days ago
இயக்குனர் பாரதிராஜா தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். கடந்தாண்டு தனுஷின் 'திருச்சிற்றம்பலம்' படத்தில் அவர் நடிப்பு அதிகம் பேசப்பட்டது. இப்போது தங்கர் பச்சானின் கருமேகங்கள் கலைகின்றன, நித்திலன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம், நிர்மல்குமார் இயக்கும் 'நா நா' உட்பட பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
இதற்கிடையே அவர் மீண்டும் படம் இயக்க இருக்கிறார். கடைசியாக 'மீண்டும் ஒரு மரியாதை' என்ற படத்தை இயக்கி, நடித்திருந்த பாரதிராஜா, பிறகு நடிப்பில் பிசியானார். இப்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட கதையை இயக்கி, நடிக்க போகிறார். தேனி பின்னணியில் உருவாகும் இந்தப் படத்திற்கு 'தாய்மெய்' என்று தலைப்பு வைத்துள்ளாராம். இதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.