தயாரிப்பாளர் சி.என்.ஜெய்குமார் காலமானார்
ADDED : 943 days ago
‛புது நெல்லு புது நாத்து' படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரும், பாரதிராஜாவிடம் பல ஆண்டுகள் தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றியவருமான சி.என்.ஜெய்குமார் வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். சென்னை, செனாய் நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டது. பாரதிராஜா நேரில் சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். பின் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அவருடன் அவரது மகனும், நடிகருமான மனோஜ், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், தயாரிப்பாளர்கள் தாணு, சித்ரா லட்சுமணன், முரளி உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் அஞ்சலி செலுத்தினர். ஏ.சி சண்முகத்தின் உறவினர் ஜெய்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.