கஸ்டடி டீஸர் வெளியீடு
ADDED : 948 days ago
வெங்கட் பிரபு முதன்முறையாக நேரடியாக தெலுங்கில் இயக்கி உள்ள படம் ‛கஸ்டடி'. இந்தப்படம் தமிழிலும் வெளியாகிறது. கிர்த்தி ஷெட்டி நாயகியாக நடிக்க, வில்லனாக அரவிந்த்சாமியும், முக்கிய வேடத்தில் சரத்குமாரும் நடித்துள்ளனர். இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மே 12ல் படம் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் படத்தின் டீஸர் வெளியாகி உள்ளது. அதிரடி ஆக் ஷனாக வெளியாகி உள்ள இதில் போலீஸாக அதிரடி காட்டி உள்ளார் நாகசைதன்யா, அவருக்கு குடைச்சலை கொடுக்கும் வில்லனாக அரவிந்த்சாமி நடித்துள்ளார். தற்போது இந்த டீஸர் சமூகவலைதளங்களில் டிரெண்ட்டாகி வைரலானது.