ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகைகள் திருட்டு
ADDED : 942 days ago
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் '3' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தனுஷ் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா. தற்போது லால் சலாம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் விக்ராந்த், விஷ்ணு விஷால் நாயகர்களாக நடிக்க, ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்திலும் நடிக்கிறார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கின்றது.
இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டின் லாக்கரில் வைத்திருந்த 60சவரன் தங்க மற்றும் வைர நகைகள், நவரத்தின கல் ஆகியவை திருடு போய்விட்டதாக சென்னை, தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துளார். கடந்த மாதம் இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிகிறது. அதுகுறித்த தகவல் இப்போது தான் தெரிய வந்துள்ளது. போலீஸ் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.