சாமி பட வில்லன் நடிகர் இறந்ததாக வதந்தி
ADDED : 977 days ago
சாமி பட வில்லன் நடிகர் இறந்ததாக வெளியான வதந்திக்கு, அவரே முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
விக்ரம் நடித்த, சாமி படத்தில் பெருமாள்பிச்சை என்ற பாத்திரத்தில் வில்லனாக நடித்தவர் கோட்டா சீனிவாசராவ், 80. வில்லனாக மட்டுமின்றி, குணச்சித்திர வேடத்தில் எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார். இவர் இறந்து விட்டதாக, செய்தி பரவியது. ரசிகர்களும் அவரது வீட்டுக்கு படையெடுக்க ஆரம்பித்தனர். சில மணி நேரத்தில், அது வதந்தி என தெரியவந்தது.
இதுகுறித்து, கோட்டா சீனிவாச ராவ் வெளியிட்ட வீடியோ பதிவில், 'என் மரணச் செய்தி பொய்யானது. ரசிகர்கள் யாரும் அதை நம்ப வேண்டாம். நான் நலமுடனும், வலிமையுடனும் இருக்கிறேன். இத்தகைய வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம்' என, கேட்டுக் கொண்டுள்ளார்.