உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / டாக்டர் ஆனார் ஆதி

டாக்டர் ஆனார் ஆதி

பல திரைப்பிரபலங்கள் போலி டாக்டர் பட்டம் வாங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் இசை அமைப்பாளரும், நடிகருமான ஹிப் ஆப் தமிழா ஆதி நிஜமாகவே முனைவர் டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார். கோவை பாரதியார் பல்லைகழகத்தில் 'மியூசிக் எண்டர்பர்னர்ஷிப்' பிரிவில் 5 ஆண்டுகள் ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதவாது: இது படிச்சு வாங்கின பட்டம் தான். இதற்காக ஐந்தரை ஆண்டுகள் கடுமையாக உழைத்திருக்கிறேன். இதற்காக நடிப்புக்கும் இடைவெளி விட்டிருந்தேன். இனிமேல் என்னை டாக்டர் ஆதி என்று தைரியமாக அழைக்கலாம். எனக்குத் தெரிந்து இந்தியாவிலேயே இந்தத் துறையில் பிஹெச்டி பட்டம் பெறுவது இதுதான் முதல் முறை என்று நினைக்கிறேன். என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !