பிரபல இளம் நடிகை அகன்ஷா துபே தூக்கிட்டு தற்கொலை
ADDED : 927 days ago
உத்தர பிரதேசத்தின் வாரணாசி நகரில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் பிரபல போஜ்புரி பட நடிகையான அகன்ஷா துபோ (வயது 25) என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
17 வயதில் ‛மேரி ஜங் மேரா பைஸ்லா' படத்தின் மூலம் அறிமுகமான அகன்ஷா, 60 சூப்பர் ஹிட் இசை ஆல்பங்களையும் வெளியிட்டுள்ளார். நேற்றிரவு வரை சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருந்த அகன்ஷா, திடீரென தற்கொலை செய்துக்கொண்டது அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.