ஆர்.ஜே.பாலாஜி உடன் இணையும் லோகேஷ் கனகராஜ்
ADDED : 967 days ago
நடிகர் ஆர்ஜே பாலாஜி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'சிங்கப்பூர் சலூன்'. இதை இயக்குனர் கோகுல் இயக்குகிறார். கதாநாயகியாக நடிகை ஷிவானி நாராயணன் நடிக்கிறார். வேல்ஸ் பிலிம் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு நிறைவுபெற்று இப்போது இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் லோகேஷ் கனகராஜ் அல்லாமல் மேலும் இரண்டு முக்கிய பிரபலங்களும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர் என கூறப்படுகிறது.