31ம் தேதி தமிழில் வெளியாகும் ஹாலிவுட் படம்
ADDED : 985 days ago
வருகிற 31ம் தேதி தமிழில் 'டன்ஜயன்ஸ் அண்ட் டிராகன்' என்ற ஹாலிவுட் ஆக்ஷன் படம் வெளியாகிறது. இந்த படத்தில் மைக்கேல் கிலியோ, கிறிஸ் பிளே, மிக்லே ராட்ரிக்ஸ், ஜஸ்டின் ஸ்மித் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். ஜோனதன் கோல்ட்ஸ் இயக்கி இருக்கிறார். புத்திசாலி திருடனான ஹீரோ தனது குழுவினருடன் இணைந்து நாட்டுக்கு ஏதாவது ஒரு நல்லது செய்வோமே என்ற எண்ணத்துடன் காணாமல் போன தனது நாட்டின் நினைவு சின்னத்தை தேடிச் செல்கிறான். அப்போது அவன் எதிர்பாராத பல பிரச்னைகளை சந்திக்கிறான். காரணம் அந்த நினைவு சின்னத்திற்கு பின்னால் இருக்கிற விஷயங்களும், அதை கடத்தி சென்றவர்களின் வலிமையும். பரபர ஆக்ஷனுடன் கூடிய காமெடி படமாக வெளியாகிறது.