எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து சொன்ன அஜித்குமார்
ADDED : 917 days ago
கடந்த பல மாதங்களாக அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வந்த நிலையில் தற்போது நீதிமன்றம் எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமான தீர்ப்பை வழங்கி இருக்கிறது. அதன் காரணமாக ஜெயலலிதாவுக்கு பிறகு அதிமுகவின் பொது செயலாளராக அவர் உருவெடுத்திருக்கிறார். இந்த நிலையில் அரசியல் கட்சிகளை சார்ந்த பல தலைவர்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், நடிகர் அஜித் குமாரும் , அதிமுகவின் பொது செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரை வாழ்த்தியிருக்கிறார். இதுகுறித்த தகவலை அதிமுகவினர் வெளியிட்டு வருகிறார்கள். சில தினங்களுக்கு முன்பு அஜித்தின் தந்தை மறைவை ஒட்டி அவரை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்த தலைவர்களில் எடப்பாடி பழனிச்சாமியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.