மகனுக்கு அழகு தமிழில் அசத்தலாக பெயர் வைத்த அனு! வாழ்த்துகளை குவிக்கும் ரசிகர்கள்
சின்னத்திரை நடிகையான அனு சில சீரியல்களில் நெகட்டிவ் ரோல்களில் நடிப்பில் மிரட்டி வந்தார். கடைசியாக பாண்டவர் இல்லம் தொடரில் நடித்து வந்த போது அவர் கர்ப்பமாக இருந்ததால் அந்த சீரியலிலிருந்து பாதியிலேயே வெளியேறினார். அண்மையில் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்த அனு, பிரசவ வேதனையின் போது தனது கணவர் உறுதுணையாய் தன்னுடன் இருந்ததை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்திருந்தார்.
தற்போது தன் மகனுக்கு தூய தமிழில் ‛வான் வியன்' என்று பெயர் சூட்டியுள்ளார். மேலும், தன் மகனுக்காக அழகான கவிதை எழுதியும், ரசிகர்களிடம் ஆசி கேட்டும் அவர் செய்துள்ள செயல் பலரையும் வியப்பிலும் நெகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. சீரியலில் வில்லியாக இருந்தாலும் நிஜத்தில் அழகிய தமிழ் மகள் என பலரையும் உருக செய்துள்ள அனுவையும், அவரது மகன் வான் வியனையும் வாழ்வாங்கு வாழ வேண்டுமென பலரும் வாழ்த்தி வருகின்றனர்.