உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / முதல்முறையாக இணையும் சிவகார்த்திகேயன் - ஜி.வி.பிரகாஷ்

முதல்முறையாக இணையும் சிவகார்த்திகேயன் - ஜி.வி.பிரகாஷ்

மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாவீரன். நாயகியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது. இதையடுத்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் புதிய திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். இதில் கதாநாயகியாக சாய் பல்லவி நடிக்கிறார் . கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் மற்றும் சோனி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் தொடங்கவுள்ளது.

இந்த படத்திற்கு இசையமைப்பாளராக முதலில் ஹாரிஸ் ஜெயராஜ் ஒப்பந்தம் ஆனாராம். சில காரணங்களால் அவர் இப்படத்தில் இருந்து விலகினார். தற்போது அவருக்கு பதிலாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாருடன் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக கூறப்படுகிறது. ஒருவேளை ஜிவி பிரகாஷ் சம்மதித்தால் சிவகார்த்திகேயன் படத்திற்கு முதன்முறையாக அவர் இசையமைக்கும் படம் இதுவாக இருக்கும்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !