மீண்டும் இணையும் சிவகார்த்திகேயன் - ரவிக்குமார் கூட்டணி!
ADDED : 920 days ago
இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 2015ல் அவரது முதல் படமான இன்று நேற்று நாளை வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதையடுத்து ரவிக்குமார், சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகி வரும் அயலான். ஏலியன் சம்பந்தப்பட்ட கதையில் உருவாகும் இந்தப்படம் நீண்டகால தயாரிப்பாக உருவாகிறது. படப்பிடிப்பு முடிந்துவிட்டாலும் கிராபிக்ஸ் காட்சிகள் முடியாததால் ரிலீஸ் தாமதமாகி வருகிறது. இந்நிலையில் மீண்டும் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஒரு படம் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளாராம். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.