நயன்தாரா 75வது படத்தில் இணைந்த இசையமைப்பாளர் தமன்
ADDED : 1106 days ago
ஷாருக்கானுடன் ஜவான், ஜெயம் ரவியுடன் இறைவன் போன்ற படங்களில் நடித்து வரும் நயன்தாரா, அடுத்தபடியாக ஷங்கரின் உதவியாளர் நீல் கிருஷ்ணா இயக்கும் தனது 75 வது படத்தில் கதையின் நாயகியாக நடிக்கப் போகிறார். இப்படத்தின் பூஜை கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற நிலையில் விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இப்படத்தில் நயனுக்கு ஜோடியாக ஜெய் நடிப்பதை வெளியிட்டிருந்த பட நிறுவனம், தற்போது இப்படத்திற்கு தமன் இசையமைப்பதை ஒரு போஸ்டர் மூலம் உறுதிப்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே விஜய்யின் வாரிசு படத்திற்கு சூப்பர் ஹிட் பாடல்கள் கொடுத்த தமன் அடுத்து நயன்தாராவின் படத்திருக்கும் இசையமைக்க ஒப்பந்தமாகி இருப்பது எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.