‛விடுதலை' ஒரு திரைக்காவியம் - படம் பார்த்துவிட்டு ரஜினி பாராட்டு
ADDED : 911 days ago
வெற்றிமாறன் இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பில் சூரி, விஜய்சேதுபதி, பவானிஸ்ரீ நடிப்பில் வெளியாகி வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்று உள்ள படம் ‛விடுதலை'. இந்த படத்தின் சிறப்பு காட்சி நடிகர் ரஜினிகாந்த்திற்கு பிரத்யேமாக திரையிட்டு காட்டப்பட்டது. தயாரிப்பாளர் எல்ரெட் குமார், இயக்குனர் வெற்றிமாறன், சூரி ஆகியோரிடம் படத்தைப் பார்த்ததும் பாராட்டிப் பேசியுள்ளார்.
படம் பார்த்துவிட்டு ரஜினி வெளியிட்ட பதிவு : ‛‛விடுதலை... இதுவரை தமிழ்த் திரையுலகம் பார்த்திராத கதைக்களம். இது ஒரு திரைக்காவியம்!
சூரியின் நடிப்பு - பிரமிப்பு
இசையராஜா - இசையில் என்றும் ராஜா.
வெற்றிமாறன் - தமிழ் திரையுலகின் பெருமை
தயாரிப்பாளருக்கு என்னுடைய வாழ்த்துகள்.
இரண்டாவது பாகத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்.
இவ்வாறு ரஜினி பாராட்டி பதிவிட்டுள்ளார்