சிக்ஸ் பேக் உடல் கட்டுக்கு மாறிய டாப்ஸி
ADDED : 911 days ago
வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் படத்தில் அறிமுகமான டாப்ஸி, அதன் பிறகு ஆரம்பம், காஞ்சனா- 2, கேம் ஓவர் உள்பட பல படங்களில் நடித்தார். சமீபகாலமாக பாலிவுட் சினிமாவில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். எப்போதும் உடலை பிட்டாக வைத்திருக்கும் டாப்ஸி இன்னும் ஒருபடி மேலே போய் இப்போது சிக்ஸ் பேக்கிற்கு தனது உடலை மாற்றி உள்ளார். தனது ஜிம் மாஸ்டர் சுஜித் கர்குட்கருடன் தீவிர பயிற்சி எடுக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார் டாப்ஸி. அவர் வெளியிட்டுள்ள இந்த சிக்ஸ் பேக் புகைப்படத்திற்கு லட்சக்கணக்கில் லைக்ஸ்கள் குவிந்து வருகிறது. ஹிந்தியில் நடிக்க இருக்கும் ஒரு புதிய படத்திற்காக இந்த சிக்ஸ் பேக் உடல் கட்டுக்கு தான் மாறி இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார் டாப்ஸி.