'உலகின் செல்வாக்கு மிக்கவர்' பட்டியலில் முதலிடம் பிடித்த ஷாருக்கான்
ADDED : 912 days ago
பிரபலமான டைம் பத்திரிக்கை ஒவ்வொரு ஆண்டும் தனது வாசர்களிடம் வாக்கெடுப்பு நடத்தி உலகின் செல்வாக்குமிக்க 100 பேரின் பட்டியலை வெளியிடும். 2023ம் ஆண்டுக்கான வாக்கெடுப்பை சமீபத்தில் நடத்தியது. தற்போது அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. மொத்தம் பதிவான 12 கோடி வாக்குகளில் 4 சதவிகித வாக்குகளை பெற்று பாலிவுட் நடிகர் ஷாருக்கான் முதலிடம் பிடித்துள்ளார்.
இரண்டாவது இடத்தில் உலக புகழ்பெற்ற சமீபத்தில் உலக கோப்பையை வென்ற கால்பந்து வீரர் லியோனல் மெஸ்சி இரண்டாம் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் தடகள வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், நடிகர் மைக்கேல் யோ, இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்க்லே மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா உள்பட பலர் இடம்பெற்றுள்ளனர்.