உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பொன்னியின் செல்வன்- 2 ரன்னிங் டைம் வெளியானது!

பொன்னியின் செல்வன்- 2 ரன்னிங் டைம் வெளியானது!

மணிரத்னம் இயக்கத்தில் கடந்தாண்டு திரைக்கு வந்த பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் 500 கோடி ரூபாய் வசூல் செய்தது. இந்த நிலையில் அப்படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி 5 மொழிகளில் வெளியாக உள்ளது. அதனால் தற்போது பிரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 47 நிமிடங்கள் இருந்த நிலையில், இரண்டாம் பாகம் 2 மணி நேரம் 37 நிமிடங்கள் இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் முதல் பக்கத்தை விட இரண்டாம் பாகம் 10 நிமிடங்கள் குறைவாக உள்ளது. அதோடு முதல் பக்கத்தை விட இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்கள் மத்தியில் இன்னும் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கும் என்று படக் குழு எதிர்பார்க்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !