தனுஷ் படத்தில் இணைந்த பிரபல நடிகரின் மகன்
ADDED : 910 days ago
நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸ். தமிழில் ஒரு பக்க கதை படம் மூலம் அறிமுகமானார். ஆனால் இந்தப்படம் வெளியாக தாமதம் ஆனது. அதற்குள் அவர் நடித்த ஓரிரு படங்கள் வெளியாகின. மலையாளத்திலும் நடித்து வந்தாலும் தொடர்ந்து தமிழ் படங்களில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். விக்ரம் படத்தில் கமலின் மகனாக நடித்தார். தற்போது மீண்டும் கமல் உடன் இந்தியன் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் தனுஷ் படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். அவர் கூறியது, ‛‛நான் தனுஷ் சாரின் 50வது படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இந்த படம் வேற லெவலாக இருக்கும் என்றார்.