தியேட்டர் உரிமையாளர் ஆகும் விஜய் பட தயாரிப்பாளர்
ADDED : 939 days ago
தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளர்களின் ஒருவர் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் குமார். விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை தயாரித்த இவர் தற்போது மீண்டும் விஜய்யை வைத்து லியோ படத்தை தயாரிக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். 50 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ளது. அதிரடி ஆக் ஷன் படமாக உருவாகிறது.
சினிமா தவிர்த்து பிஸ்னஸ் மேனாக பல துறைகளில் வலம் வருகிறார் லலித். இந்நிலையில் இப்போது சென்னை வண்டலூர் அருகில் ஐந்து ஸ்கிரீன் கொண்ட மல்டிபிலக்ஸ் திரையரங்கம் ஒன்றை உருவாக்கி வருகிறார். அடுத்த வருடம் இந்த திரையரங்கை திறக்கவுள்ளார் என கூறப்படுகிறது.