பீஸ்ட் வெளியாகி ஒரு வருடம் நிறைவு
ADDED : 909 days ago
டாக்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் நெல்சன் தீலிப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வெளிவந்த திரைப்படம் பீஸ்ட். பூஜா ஹெக்டே, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்தனர். அனிரூத் இசையமைத்திருந்தார். உளவுப்பிரிவு அதிகாரியாக விஜய் நடித்திருந்தார். ஒரு மாலிற்குள் தீவிரவாதிகள் கும்பல் மக்களை சிறைபிடித்து வைக்க அவர்களை விஜய் காப்பாற்றுவது மாதிரயான கதை. இந்த படம் வெளியான காலகட்டத்தில் நெகட்டிவ் விமர்சனமே அதிகம் வந்தது. ஆனாலும் வசூல் ரீதியாக இந்த படம் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த படம் வெளிவந்து இன்று ஒரு வருடம் நிறைவு பெற்ற நிலையில் இப்படத்தில் இருந்து ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். பீஸ்ட் படத்தை நினைவுக்கூர்ந்து ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.