'விமானம்' முதல்பார்வை வெளியீடு : ஜூனில் படம் ரிலீஸ்
ADDED : 906 days ago
சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் 'விமானம்'. தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் ஒரே தருணத்தில் தயாரிக்கப்பட்ட இரு மொழி திரைப்படம் இதுவாகும். இதனை சிவ பிரசாத் யானலா எழுதி இயக்கியிருக்கிறார். சமுத்திரக்கனியுடன் மாஸ்டர் துருவன், அனுசுயா பரத்வாஜ், மீரா ஜாஸ்மின், 'நான் கடவுள்' ராஜேந்திரன், ராகுல், ராமகிருஷ்ணா, தன்ராஜ் உள்ளிட்ட பல நடித்திருக்கிறார்கள். விவேக் கலேபு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சரண் அர்ஜுன் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் முதல் பார்வையை தற்போது வெளியிட்டுள்ளனர். இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் ஒன்பதாம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது என படத்தை தயாரித்துள்ள ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் கே கே கிரியேட்டிவ் ஒர்க்ஸ் ஆகியவை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.