உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / லீக்கானது சூர்யா 42 படத்தின் டைட்டில்

லீக்கானது சூர்யா 42 படத்தின் டைட்டில்

நடிகர் சூர்யா இயக்குனர் சிறுத்தை சிவா உடன் இணைந்து புதிய படத்தில் நடித்து வருகிறார். சூர்யாவின் 42 வது படமாக உருவாகும் இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார் . திஷா பதானி சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தில் சூர்யா 5 வித்தியாசமான தோற்றங்களில் நடிக்கவுள்ளார். மேலும் 10க்கும் மேற்பட்ட மொழிகளிலும் இந்த படத்தை வெளியிட எண்ணி உள்ளனர்.

சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் வீடியோவை வரும் ஏப்ரல் 16 அன்று வெளியிடுவதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர். இந்நிலையில் சமூக வலைதளத்தில் இப்படத்தின் டைட்டில் வீடியோ சென்சார் சான்றிதழ் லீக் ஆகியுள்ளது அதன்படி இந்த படத்தின் டைட்டில் கங்குவா என உள்ளது. இந்த டைட்டில் அறிவிப்பு வீடியோ நேரம் 1 நிமிடம் 16 நொடிகளில் என கட்டப்பட்டுள்ளது .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !