‛துருவ நட்சத்திரம்‛ முதல் பாகம் யுத்த காண்டமாக வருகிறது
ADDED : 921 days ago
கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் துருவ நட்சத்திரம். ரித்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்ரன், டிடி எனும் திவ்யதர்ஷனி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். 2017ம் ஆண்டு இந்த இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. பல்வேறு காரணங்களால் படம் நின்று நின்று நடைபெற்று வந்தது. ஆறு ஆண்டுகளாக தயாராகி வரும் இந்தப்படம் வரும் மே 19 அன்று வெளியாகும் சமீபத்தில் என தகவல் வந்தது. இந்நிலையில் இன்று விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு துருவ நட்சத்திரம் படத்திலிருந்து போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதன் படி துருவ நட்சத்திரம் முதல் பாகம் யுத்த காண்டம் என அறிவித்துள்ளனர். இதை வைத்து பார்க்கையில் இந்த படம் இரு பாகங்களாக வெளியாகும் என தெரிகிறது.