உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / காஞ்சனா அடுத்த பாகத்தின் அப்டேட் கொடுத்த லாரன்ஸ்

காஞ்சனா அடுத்த பாகத்தின் அப்டேட் கொடுத்த லாரன்ஸ்

நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் ருத்ரன். இந்த படத்திற்காக லாரன்ஸ் மற்றும் படக்குழுவினர்கள் கோவை, மதுரை போன்ற ஊர்களில் தியேட்டர் விசிட் செய்து வருகின்றனர். கோவையில் நேற்று ரசிகர்களை சந்தித்தனர். அப்போது அவர் பேசியது , ருத்ரன் படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த படத்தின் மூலம் மூன்று வருடங்கள் கழித்து ரசிகர்களை சந்திப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. கொரோனாவிற்கு பிறகு மக்களின் மனநிலை தற்போது மாறிவிட்டது. சிறிய படங்களுக்கு மக்கள் அதிக அளவில் ஆதரவு கொடுத்து வருகின்றனர். ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு காஞ்சனா படத்தின் அடுத்த பாகத்தை மீண்டும் எடுக்கலாம் என்று நினைக்கிறேன் என லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !