நாயகன் 2வில் நடிக்க ஆசைப்படும் ஜெயம் ரவி
ADDED : 903 days ago
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஷ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் ரிலீஸிற்கு தயாராக உள்ள திரைப்படம் 'பொன்னியின் செல்வன்' 2. இப்போது இந்த படத்தின் புரோமோஷனில் படக்குழு ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ஜெயம் ரவி, ''பொன்னியின் செல்வன் 1' படத்திற்கு கொடுத்த வரவேற்பு போன்று, அதன் இரண்டாம் பாகத்திற்கும் கொடுப்பீர்கள் என நம்புகிறோம். இந்த படத்திற்காக நிறைய நேர்காணல்களில் நான் பங்கேற்றுபோது 'பொன்னியின் செல்வன் 1' படத்தை எந்த படத்துடன் ஒப்பிட்டு பார்க்கிறீர்கள் என கேட்பார்கள். அதற்கு நான், 'பொன்னியின் செல்வன் 2' உடன் ஒப்பிட்டு பாருங்கள் என தெரிவித்தேன். மணிரத்னம் இயக்கிய 'நாயகன் படத்தின் இரண்டாம் பாகம் உருவானால் அதில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு உள்ளது என தெரிவித்துள்ளார்.