உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விரைவில் அம்மா ஆகப் போகும் 'நண்பன்' நாயகி இலியானா

விரைவில் அம்மா ஆகப் போகும் 'நண்பன்' நாயகி இலியானா

2006ம் ஆண்டில் வெளிவந்த 'கேடி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் இலியானா. அதற்குப் பிறகு பல தெலுங்குப் படங்களிலும், ஹிந்திப் படங்களிலும் நடித்தார். ஹிந்தியில் 'பார்பி' படம் அவருக்குப் பெரிய வெற்றியைக் கொடுத்தது.

'கேடி' படத்திற்குப் பிறகு தமிழில் ஷங்கர் இயக்கத்தில், விஜய் ஜோடியாக 'நண்பன்' படத்தில் மட்டுமே நடித்தார். அதற்குப் பிறகு தமிழில் வேறு எந்தப் படத்திலும் அவர் நடிக்கவில்லை. கடந்த சில வருடங்களாகவே அவருக்கு அதிக வாய்ப்புகள் வரவில்லை.

இன்ஸ்டாகிராம் தளத்தில் அவ்வப்போது கிளாமரான, கவர்ச்சியான புகைப்படங்களைப் பதிவிட்டு ரசிகர்களுடன் தொடர்பிலேயே இருந்தார். கடந்த சில வருடங்களாக ஆன்ட்ரூ நீபோன் என்பவரைக் காதலித்து வந்தார் இலியானா. ஆனால், அவர்கள் இருவரும் 2019ல் பிரிந்துவிட்டதாகத் தகவல்.

அதற்கடுத்து ஹிந்தி நடிகையான காத்ரினா கைப் சகோதரர் செபாஸ்டியன் லாரன்ட் மைக்கேல் என்பவரைக் காதலித்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் ஒரு குழந்தை சட்டை மற்றும் மாமா என்ற டாலர் உள்ள செயின் ஆகியவற்றைப் பகிர்ந்து “விரைவில்…. என்னுடைய லிட்டில் டார்லிங்கை சந்திக்கக் காத்திருக்க முடியவில்லை,” என்று தன்னுடைய தாய்மை பற்றி அறிவித்துள்ளார்.

இதை உறுதிப்படுத்தும் விதமாக இலியானாவின் தாய் சமீரா, ‛‛எனது புதிய பேரக் குழந்தையை விரைவில் உலகிற்கு வரவேற்கிறோம்'' என பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !