மேலும் செய்திகள்
‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்!
873 days ago
ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை!
873 days ago
த்ரிவிக்ரம், வெங்கடேஷ் படத்தில் இணையும் இளம் நாயகி!
873 days ago
தமிழ்ப் புத்தாண்டு தினமாக ஏப்ரல் 14ம் தேதியன்று ஐந்து நேரடி தமிழ்ப் படங்கள் வெளியாகின. அன்றைய தினம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட 'தமிழரசன், யானை முகத்தான்' ஆகிய இரண்டு படங்கள் திடீரென வெளியீட்டுத் தேதியை மாற்றின. ஏப்ரல் 21ம் தேதியன்று வெளியாகும் என்று அன்றைய தினமே விளம்பரமும் செய்தார்கள். அறிவித்தபடி இந்த 21ம் தேதி அவை வெளியாகுமா என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும்.
அந்த இரண்டு படங்கள் தவிர பாண்டியகர்களைப் பற்றிய சரித்திரப் படமான 'யாத்திசை', விமல் நடித்துள்ள 'தெய்வ மச்சான், குலசாமி' ஆகிய படங்களும், மற்றும் 'ஜம்பு மகரிஷி' என்ற படமும் ஏப்ரல் 21ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளன. அறிவிக்கப்படும் படங்கள் கடைசி நேரத்தில் வெளியீட்டிலிருந்து பல்வேறு காரணங்களால் பின் வாங்குகின்றன.
அடுத்த வாரம் ஏப்ரல் 28ம் தேதி 'பொன்னியின் செல்வன் 2' படம் வெளிவருவதால் அதற்கடுத்த இரண்டு வாரங்களுக்குத் தியேட்டர்கள் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். அதனால், இந்த வார வெளியீட்டில் எந்தப் பின்வாங்கலும் இருக்காது என்றே தெரிகிறது.
873 days ago
873 days ago
873 days ago