ஓ.ஜி படப்பிடிப்பில் இணைந்த பவன் கல்யாண்
ADDED : 1168 days ago
சாஹோ பட இயக்குனர் சுஜித் இயக்கத்தில் நடிகர் பவல் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் படம் ஓ.ஜி . இதை ஆர்ஆர்ஆர் படத்தை தயாரித்த டிவிவி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. தமன் இசையமைக்கிறார். கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கியது. இன்று முதல் இந்த படத்தின் படப்பிடிப்பில் பவன் கல்யாண் இணைந்துள்ளார். அவரது போட்டோ உடன் இந்த தகவலை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ஆக் ஷன் நிறைந்த அதிரடி படமாக தயாராகிறது.