பதான் படத்திற்காக ஷாருக்கான் சம்பளம் இத்தனை கோடியா?
ADDED : 961 days ago
நடிகர் ஷாருக்கான் இப்போது அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். கடைசியாக இவரது நடிப்பில் வெளிவந்த திரைப்படம் பதான். சித்தார்த் ஆனந்த் இயக்கிய இப்படத்தை யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரித்தனர். தீபிகா படுகோன், ஜான் ஆப்ரகாம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர்.
இந்த படம் உலகளவில் ரூ. 1000 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக படக்குழு அறிவித்தனர். இதன் மூலமாக தயாரிப்பாளருக்கு சுமார் ரூ. 333 கோடி லாபம் கிடைத்துள்ளது. ஷாருக்கானுக்கு 60% சம்பள தொகையாக கொடுத்துள்ளனர். அதன்படி ரூ. 200 கோடி சம்பளமாக பதான் படத்திற்காக பெற்றுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.