ஒரு பாடலுக்கு ஒரு கோடி கேட்கும் ஸ்ரேயா?
ADDED : 976 days ago
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரேயா. திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். இப்போது கப்ஜா படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ளார் ஸ்ரேயா. இந்நிலையில் தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் படத்திற்கு குத்துப்பாடலுக்கு நடனம் ஆட ஸ்ரேயாவை அணுகியுள்ளனர். அந்த பாடல் காட்சிக்காக ரூ.1 கோடி சம்பளம் கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்போது ஸ்ரேயா கேட்ட சம்பளத்தை கொடுத்து அவரே நடன ஆட வைக்கலாமா அல்லது வேறு நடிகையை ஒப்பந்தம் செய்யலாமா என படக்குழுவினர் ஆலோசித்து வருகின்றனர்.