உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஹிந்தியில் ரீமேக் ஆகும் பரியேறும் பெருமாள்

ஹிந்தியில் ரீமேக் ஆகும் பரியேறும் பெருமாள்

கடந்த 2018ம் ஆண்டு இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் கதிர், நடிகை கயல் ஆனந்தி நடித்து வெளிவந்த திரைப்படம் பரியேறும் பெருமாள். இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். இந்த படம் விமர்சகர்கள் மற்றும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தால் தான் மாரி செல்வராஜ், தனுஷை வைத்து கர்ணன் படம் இயக்கும் வாய்ப்பை பெற்றார்.

இந்நிலையில் இந்த படத்தை இப்போது ஹிந்தியில் ரீமேக் செய்யும் வேலை நடக்கிறது. பாலிவுட் திரையுலகில் முன்னணி தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் கரண் ஜோகர் இந்த படத்தை இயக்கி, தயாரிக்க உள்ளதாராம். இதில் சித்தார்த் சதுர்வேதி மற்றும் திரிப்தி திமிரி ஆகியோர் நாயகன், நாயகியராக நடிக்க உள்ளனர். என கூறப்படுகிறது. வரும் ஜூலை மாதம் முதல் இந்த படத்தின் வேலைகளை துவங்க திட்டமிட்டுள்ளாராம் கரண் ஜோஹர். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !