திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற நடிகை ரம்யா பாண்டியன்
ADDED : 904 days ago
நண்பகல் நேரத்து மயக்கம் படத்தை அடுத்து தற்போது இடும்பன்காரி உள்பட இரண்டு படங்களில் நடித்து வருகிறார் ரம்யா பாண்டியன். சோசியல் மீடியாவில் தான் ஒர்க்கவுட் செய்யும் புகைப்படங்கள் மற்றும் கிளாமர் புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வரும் ரம்யா பாண்டியன், தற்போது தான் ஒரு ஆன்மிக பயணம் மேற்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதாவது தனது சகோதரிகள் கீர்த்தி பாண்டியன் மற்றும் சுந்தரி ஆகியோருடன் இணைந்து திருவண்ணாமலையில் அண்ணாமலையாரை தரிசனம் செய்ய சென்றிருக்கிறார். அப்போது கிரிவலமும் சென்று இருக்கிறார். இந்த ஆன்மிக பயணம் புதுமையாக இருந்ததாக தெரிவித்திருக்கும் ரம்யா பாண்டியன், மிகவும் அமைதியான அழகான அனுபவம் கிடைத்தது என்றும் தனது பதிவில் தெரிவித்துள்ளார். கோவிலில் தாங்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் அவர் வெளியிட்டு இருக்கிறார் .