மேலும் செய்திகள்
‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்!
864 days ago
ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை!
864 days ago
த்ரிவிக்ரம், வெங்கடேஷ் படத்தில் இணையும் இளம் நாயகி!
864 days ago
மாதவனும், நயன்தாராவும் முதல் முறையாக இணைந்து நடிக்கப் போகும் படம் தி டெஸ்ட். இந்த படத்தில் சித்தார்த் - ராஷி கண்ணா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். தயாரிப்பாளர் சசிகாந்த் இயக்குனராக அறிமுகமாகும் இந்த படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்ட கதையில் உருவாகிறது. தற்போது தொழில் நுட்ப கலைஞர்கள் குறித்த இன்னொரு அறிவிப்பை அப்படக்குழு வெளியிடப்பட்டுள்ளது. அதில், இந்த படத்தின் ஸ்போர்ட்ஸ் இயக்குனராக துருவ் பஞ்சுவாணி என்பவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். விஎப்எக்ஸ் விஜய்யும், குணால் ராஜன், ராஜா கிருஷ்ணன் ஆகியோர் சவுண்டு மிக்ஸிங், காஸ்ட்யூம் டிசைனராக பூர்ணிமா ராமசாமி, அனுவர்தன், சண்டை இயக்குனராக தினேஷ் சுப்பராயன், எடிட்டராக டிஎஸ் சுரேஷ், ஒளிப்பதிவாளராக விராஜ் சிங் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாாதம் துவங்குகிறது. சென்னை, பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு இந்த படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.
864 days ago
864 days ago
864 days ago