சதீஷ் ஹீரோவாக நடிக்கும் வித்தைக்காரன் : முதல்பார்வை வெளியீடு
ADDED : 861 days ago
பல படங்களில் காமெடியனாக நடித்துள்ள சதீஷ், நாய் சேகர் என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். அந்த படம் ஓரளவு வெற்றி பெற்றதை அடுத்து தற்போது மீண்டும் அவர் வித்தைக்காரன் என்ற ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கப்போகிறார். வெங்கி என்பவர் இயக்கும் இந்த படத்தில் சதீஷ்க்கு ஜோடியாக சிம்ரன் குப்தா என்பவர் நடிக்க, ஆனந்தராஜ், ஜான் விஜய் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் முதல்பார்வை போஸ்டர் வெளியாகி உள்ளது. செஸ் விளையாட்டை மையமாகக் கொண்ட கதையில் உருவாகும் இந்த படத்திற்கு விபிஆர் இசையமைக்க, விஜய் பாண்டி என்பவர் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.