தந்தை இயக்கிய பட பாடலுக்கு அதிரடி நடனமாடிய அதிதி ஷங்கர்!
ADDED : 891 days ago
முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்த விருமன் என்ற படத்தில் அறிமுகமானவர் அதிதி ஷங்கர். முதல் படத்திலேயே அவரது நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயனுடன் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். இதை அடுத்து இன்னும் சில படங்களின் நடிப்பதற்கும் கதை கேட்டு இருக்கிறார். மேலும் ஆரம்பத்தில் ஹோம்லியான புகைப்படங்களாக இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வந்த அதிதி ஷங்கர் தற்போது கிளாமரான புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில் தற்போது அவர் தனது தந்தை ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான நண்பன் படத்தில் இடம்பெற்றுள்ள ஒல்லி பெல்லி என்ற பாடலுக்கு அதிரடி நடனமாடி இருக்கிறார். அது குறித்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறார் அதிதி ஷங்கர். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.