டுவிட்டருக்கு இடைவெளி விடும் சிவகார்த்திகேயன்!
ADDED : 888 days ago
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வரும் ஆகஸ்ட் 11 அன்று வெளியாகும் என அறிவித்திருந்தனர். இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் ராஜ் குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் தனது அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன்.
இந்நிலையில் இன்று அவரது டுவிட்டர் கணக்கில் ஒரு முக்கியமான செய்தியை பகிர்ந்துள்ளார். அதன்படி, என் அன்பு சகோதர சகோதரிகளே டுவிட்டரில் இருந்து நான் சிறிது காலம் ஓய்வு எடுக்க உள்ளேன். நான் விரைவில் திரும்பி வருவேன். என் படம் குறித்த அப்டேட்டுகளை என் குழுவினர் அறிவிப்பார்கள் என பதிவிட்டுள்ளார்.